Loading . . .




இராஜபாளையம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவியர்கள் எழுதும் மற்றும் அமரும் இருக்கைகள் (Desks & Bench) வழங்கும் விழா MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

*இராஜபாளையம் தொகுதி*சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு உயர்நிலைப் பள்ளிக்கும் இராஜபாளையம் நகர் தெற்கு காவல்நிலையம் அருகிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவியர்கள் எழுதும் மற்றும் அமரும் இருக்கைகள் (Desks & Bench) வழங்கும் விழா MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில்  (05.07.2022) காலை 9 மணியளவில்  நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய MLA அவர்கள்,

 சேத்தூரிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள், பள்ளிக்கு சுண்ணாம்பு அடித்தல், குடிநீர்த் தொட்டி மற்றும் மின் விளக்கு , மின் விசிறி வசதி மற்றும் ஆண்டு விழா நடத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர், அதற்கு MLA அவர்கள் தனது சொந்த செலவில் மின் விளக்கு , மின் விசிறி வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் பேரூராட்சி நிர்வாகத்தின் மூலம் தண்ணீர் தொட்டி அமைத்தல் மற்றும்  CEO அவர்களிடம் பேசி விரைவில் ஆண்டு விழா நடத்தப்படும் எனக்கூறினார், மேலும்

இராஜபாளையம் நகரில் உள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசிய MLA அவர்கள், நமது *தமிழக முதல்வர்  அவர்கள்* மாணவ மாணவியர்களில் கல்வி வளர்ச்சிக்காக  சிறப்பாக பணியாற்றி வருகிறார், அதன்விளைவாக மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இனையாக அரசு பள்ளி வளர்ச்சி பெற்று மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவராக வேண்டுமெனவும் நோக்கில் மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தவர் *மாண்புமிகு நமது தமிழக முதல்வர் அவர்கள்*  தான் எனவும், அனைத்து துறையிலும்  கல்வியிலும் எப்போதும்  சிறந்து விளங்கக்கூடிய மாநிலம் தமிழகம் தான் அதற்கு நமது *தமிழக முதல்வர் அவர்கள்* எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பார் எனக்கூறினர்.

இவ்விழாவில் தலைமை ஆசிரியர்கள் சுந்தரராஜன் சிவகுமாரி நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா சேத்தூர் பேரூர் சேர்மன் பாலசுப்பிரமணியன்  பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலிஅண்ணாவி  துணை சேர்மன் காளீஷ்வரிமாரிச்செல்வம் ஒன்றிய துணை செயலாளர் குமார் மற்றும் நகர பேரூர் கழக கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News