Loading . . .




உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு MLA தங்கபாண்டியன் பரிசு வழங்கினார்.

The Forecast 4 years ago தங்கபாண்டியன்

*மே-1 உழைப்பாளர்கள் தினத்தை* முன்னிட்டு  *இராஜபாளையம் தொகுதி* செட்டியார்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிந்துவரும் தூய்மை பணியாளர்களுக்கு நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்*  பனியன்கள் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கினார் அதனைத்தொடர்ந்து செட்டியார்பட்டி தளவாய்புரம் நெல் & அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமை *S.தங்கப்பாண்டியன்.,MLA அவர்களும் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும்* தொடங்கி வைத்தனர். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், உழைப்பாளர்களால் தான் உலகமே இயங்குகிறது அத்தகைய உழைப்பாளர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நமது *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்* செயல்படுத்தி வருகிறார் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன் துணை சேர்மன் விநாயகமூர்த்தி ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மருத்துவர் கருணாகரபிரபு சங்கத்தலைவர் ஆனந்தன்  பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் பேரூர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News