Loading . . .




இராஜபாளையம் உழைப்பாளர்கள் தினம் சுந்தரநாச்சியார்புரம் ,மேலப்பாட்டகரிசல்குளம் கிராம சபைக் கூட்டத்தில் நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் கலந்து கொண்டுள்ளார்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

*மே-1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதி* சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி மற்றும் மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்  நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும்*  கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சுந்தரநாச்சியார்புரம் மேலப்பாட்டகரிசல்குளம்  ஊராட்சி  பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து பேசிய MLA அவர்கள், கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு வருடத்திற்கு ஆறு கிராம சபைக்கூட்டத்தை நடத்த *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்* உத்தரவிட்டுள்ளார் எனவும் மேலும் சுந்தரநாச்சியார்புரம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து குளியல் தொட்டி மற்றும் தெருக்களில் பேவர் பிளாக் தளம் அமைக்கப்படும் எனக் கூறினார் அதனைத்தொடர்ந்து பேசிய சேர்மன் அவர்கள் மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் விரைவில் மேம்படுத்தப்படும் எனக் கூறினார்.

இந்நிகழ்வில் துணை சேர்மன் துரைகற்பகராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள்  உறுப்பினர்கள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய பொருளாளர் காந்தி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மகளிரணி அமைப்பாளர் ஜெயந்தி கிளை செயலாளர் முருகேசன்  பொதுமக்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News