தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சார்பில் வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு நிகழ்ச்சி விஜயவாடாவில் நடைபெற்றது
The Forecast 1 year ago ஆந்திரா
தமிழ்நாடு கைத்தறித் துறை சார்பில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி இரகங்களின் விற்பனையினை அதிகரிக்க ஏதுவாக வாங்குவோர் விற்பனை செய்வோர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் வாங்குவோர் விற்பனை துறை அமைச்சர் ஆர்.காந்தி முன்னிலையில், கைத்தறி இரகங்களை கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர், பொருளதாரத்தில் பின்தங்கியோர் நலன் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ். சவிதா, கைத்தறி மற்றும் துணிநூல் ஆணையர் ரேகா ராணி, இ.ஆ.ப., ஆந்திரப் பிரதேச மாநில கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க நிர்வாக இயக்குநர் பாவண மூர்த்தி, இ.வ.ப., மற்றும் பொது மேலாளர் (நிர்வாகம்), ஜார்கிராப்ட், ஜார்க்கண்ட், பங்கஜ் குமார் ஷா ஆகியோரும் தமிழ்நாடு கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., கைத்தறி துறை கூடுதல் இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments