Loading . . .




ராஜபாளையம் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்க பட்ட புதிய பேருந்து நிலையம் SH41 முதல் தென்காசி ரோடு NH 744 வரையில் இணைப்புசாலை வேலை மீண்டும் திமுக ஆட்சியில் ஆணை. தங்கபாண்டியன்.MLA

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதி,* இராஜபாளையம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருப்பதால் *புதிய பேருந்து நிலையம் (SH41) முதல் தென்காசி ரோடு (NH 744)* வரையில் இணைப்புசாலை அமைக்கவேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கடந்த ஆட்சியில் (2016-2021) நான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது அரசு அதிகாரிகள் கோரிக்கை ஏற்றுக்கொண்டு அரசாணை வெளியீட்டு நிதி வழங்காமல் பணியை நிறுத்தி வைத்தனார். இதனை தொடர்ந்து கழக ஆட்சி வந்தவுடன் என்னுடைய  தொடர் முயற்சியால் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி துறை சார்ந்த அதிகாரிகளிடம் கவனத்திற்கு கொண்டு சென்று தற்போது பணி தொடங்குவதற்கான *G.O (அரசாணை)* 02.05.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நிலம் கையாகபடுத்தி 

பணிகள் நடைபெறும். மேலும் பணி தொடங்கிட *G.O (அரசாணை)* வெளியிட்ட *மாண்புமிகு தமிழக முதலமைச்சர்* அவர்களுக்கும், *மாண்புமிகு நெடுஞ்சாலை துறை அமைச்சர்* அவர்களுக்கும் இதற்கு பரிந்துரை செய்த *மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்* அவர்களுக்கும் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அவர்களுக்கும் இராஜபாளையம் தொகுதி மக்கள் சார்பாகவும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினரான எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறினார்

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News