Loading . . .




சொத்து வரி குறைக்க நடவடிக்கை. தங்கபாண்டியன் MLA

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

29/04/2022 அன்று சட்ட மன்றத்தில் வைத்து இராஜபாளையம் நகராட்சி  பகுதியில் சொத்து வரிஉயர்வு குறித்து *சட்டமன்ற உறுப்பினரான நான்* கோரிக்கை மனு மூலம் *நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்  கே.என்.நேரு* அவர்களின் கவனத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு நிலை நகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை விட இராஜபாளையம் நகராட்சியில்தான் சொத்து வரி  வீதம் 20.80%  (6 மாதம்) மற்றும் அடிப்படை வரி விகிதம் அதிகமாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் கொண்டு சென்றேன். அதற்கு

 அமைச்சர் அவர்கள் தற்போதைய பொது சொத்து வரி சீராய்வு  நடவடிக்கை சமயத்தில் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படாத வகையில் சொத்து வரி குறைவு செய்ய நகராட்சிகளின் ஆணையாளர் அவர்கள் மூலம் தக்க ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் நேற்று (05/05/2022) மாலை நகராட்சிகளின் ஆணையாளர்  திரு.பொன்னையா

(CMA) அவர்களை சந்தித்த போது  அமைச்சர் அவர்கள் இராஜபாளையம் நகராட்சிக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி, மற்ற சிறப்பு நிலை நகராட்சியில் உள்ளது போல் சொத்து வரி விதிப்பை சரி செய்ய வேண்டி தொலைபேசியில் தெரிவித்ததை அடுத்து நகராட்சி நிர்வாக செயலாளருக்கு அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறினார் என்பதை இராஜபாளையம் நகர் மக்களுக்கு  தெரிவித்து கொள்கிறேன்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News