இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையின் முக்கிய குறியீடு சென்செக்ஸ் 118 புள்ளிகள் குறைந்து 81,785 புள்ளிகளில் முடிந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 44 புள்ளிகள் சரிவடைந்து 25,069 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இந்த சரிவுக்குக் காரணமாக, DLF, ABB India, HDFC வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் குறைந்தன. ஆனால், இதே நேரத்தில் சில முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வை பதிவு செய்தன.
குறிப்பாக, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு லாபகரமான நாளாக அமைந்தன. நிபுணர்கள், உலகளாவிய சந்தை மாற்றங்களும், உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைகளும் பங்குச்சந்தையின் இயக்கத்தில் தாக்கம் ஏற்படுத்தியதாகக் கூறுகின்றனர்.
0 Comments