Loading . . .




வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது LVM3-M5 ராக்கெட்!

Janani G 4 months ago மின்னணு தேடல்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, LVM3-M5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த ராக்கெட், 4,410 கிலோ எடை கொண்ட CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சுமந்து கொண்டு புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்த புறப்பட்டது.

இச்சாதனையின் சிறப்பம்சம் என்னவென்றால், CMS-03 செயற்கைக்கோள்தான் இதுவரை இந்தியாவில் இருந்து புவிவட்டப் பாதைக்கு ஏவப்பட்டதிலேயே அதிக எடை கொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இந்த வெற்றிகரமான ஏவுதல் மூலம், தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் இந்தியாவின் ஆற்றல் மேலும் வலுப்பெறும்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News