காப்பீடு துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
Janani G 1 month ago மின்னணு தேடல்
காப்பீடுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டிற்கான (FDI) வரம்பை 100% ஆக உயர்த்த அனுமதிக்கும் புதிய மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.
தற்போதுள்ள விதிகளின்படி, காப்பீடுத் துறையில் அதிகபட்சமாக 74% வரை மட்டுமே அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு அமலில் இருந்தபோதே, இத்துறையில் சுமார் ₹82,000 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் புதிய நிதிச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகவே இந்த முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. 100% முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதன் மூலம், இத்துறைக்கு மேலும் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும், சந்தை போட்டியை அதிகரித்து நுகர்வோருக்குச் சிறந்த சேவைகளை வழங்கவும் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments