Loading . . .




வங்கிக் கடன் EMI குறைய வாய்ப்பு: லோன் வாங்கியோருக்கு மகிழ்ச்சிச் செய்தி

Janani G 6 months ago மின்னணு தேடல்

வங்கிகளில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இ.ஆ.ப., டிசம்பர் மாதத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுடிருந்தார்.

அதை போலவே, முன்னதாக, 6% ஆக இருந்த ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஜூன் மாதத்தில் 5.5% ஆகக் குறைக்கப்பட்டது. தற்போது, பொருளாதார வல்லுநர்கள் இதை மேலும் 0.5% குறைக்கப்படலாம் என்று கணித்துள்ளனர். இந்தக் குறைப்புச் செயல்படுத்தப்பட்டால், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் மாதாந்திர தவணைத் தொகை (EMI) கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாகும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News