Loading . . .




தங்கம், வெள்ளி விலையில் தொடர் சரிவு

The Forecast 2 months ago மின்னணு தேடல்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $104 அளவிற்கு குறைந்து $4,937 ஆக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் $2 குறைந்து $74 ஆக பதிவாகியுள்ளது. இந்த சரிவின் எதிரொலியாக, இந்திய சந்தையிலும் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கணிசமான குறைவு காணப்படும் என வணிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை சந்தையில் நேற்று (பிப்.16) சவரன் தங்கம் ₹960 குறைந்து ₹1,15,520க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொருத்து வரும் நாட்களிலும் விலை ஏற்றத் தாழ்வுகள் தொடர வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments

Post your comment here

மின்னணு தேடல் Relateted News