இராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் உராட்சியில் இன்று காலை (08.05.2022) நடைபெற்ற கோவிட்-19 மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாமை நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் உராட்சியில் இன்று காலை (08.05.2022) நடைபெற்ற கோவிட்-19 மெகா பூஸ்டர் தடுப்பூசி முகாமை நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தொடங்கி மேலும் பயனாளிகளின் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் *இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மக்களை முழுமையாக காப்பாற்றிய ஒரே முதல்வர் நம் தமிழக முதல்வர்தான்.* மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை *10.60 கோடி* பேருக்கு தடுப்பூசி செலுத்தபட்டது. மேலும் நம் *தமிழக முதல்வர்* அவர்கள் முதல்வராக பொறுப்பேற்று *இராண்டாவது ஆண்டில் (07.05.2022) அடியெடுத்துவைத்தவுடன் நேற்று (07.05.2022) சட்டமன்றத்தில் இராஜபாளையம் நகர்ப்புற பகுதிகளில் 5 ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அறிவிப்பு செய்துள்ளார்* என கூறினார். இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், கிளை செயலாளர் தங்கமணி மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
0 Comments