நூல் விலை உயர்வு: கோவை மற்றும் திருப்பூரில் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம்
The Forecast 2 months ago திருப்பூர்
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இன்று முதல் 50 சதவீத ஜவுளி உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த மூன்று வாரங்களில் நூல் விலை கிலோவுக்கு சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தி செலவு அதிகரித்து, ஜவுளி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை சரிவால் ரூ.100 கோடி மதிப்புள்ள துணிகள் தற்போது தேக்கமடைந்துள்ளன. தேக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக சங்கம் விளக்கமளித்துள்ளது. நிலைமை சீரானால் மட்டுமே உற்பத்தி மீண்டும் முழுமையாக தொடங்கும் என எதிர்பார்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments