Loading . . .




இராஜபாளையம் பகுதி நெசவாளர்கள் கடந்த வாரம் கோரிக்கை, MLA தங்கபாண்டியனியன் நேரடி நடவடிக்கை

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் பகுதி நெசவாளர்கள் கடந்த வாரம்  MLA அவர்களை சந்தித்து நெசவாளர் நலனுக்காக சில கோரிக்கை வைத்தனர் அதற்கு MLA அவர்கள் உங்கள்பகுதிக்கே AD அவர்களை அழைத்து நேரடியாக வருவதாக கூறியிருந்தார் அதனைத் தொடர்ந்து, இன்று  (12.05.2022) காலை 11 மணியளவில் 743, சிவகாமிபுரம் கூட்டுறவு சங்கத்தில்  நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தலைமையில்  உதவி இயக்குனர் ரகுநாத்  அவர்கள் முன்னிலையில் ஆலோசனைக்கூட்டம்  நடைபெற்றது.

 இந்நிகழ்வில் நெசவாளர்கள் சார்பாக சில கோரிக்கைகள் வைக்கப்பட்டது அதில் முக்கிய கோரிக்கையாக

காடா நூல் வழங்குவதை நிறுத்திவிட்டு வருடத்திற்கு 32 லட்சம் ஜனதா ரக சேலைகள் நெய்வதற்கு நூல்கள் வழங்க வேண்டும்,

ராட்டை நெய்தல் செய்யும் முதியோர்களுக்கு தமிழக அரசு சார்பாக நிதி உதவி வழங்க வேண்டுமெனவும் மற்றும் நெசவாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

அதற்கு MLA அவர்கள் பதிலளிக்கையில் பஞ்சு விலைகள் 3 மடங்கு உயர்ந்த போதிலும் *மாண்புமிகு நமது தமிழக முதல்வர் அவர்கள்* நெசவாளர்களின் நலனுக்காக தொடர்ந்து நெய்வதற்கு நூல் வழங்கி வருகிறார் எனவும் மேற்கண்ட கோரிக்கைகளை *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் மற்றும் மாண்புமிகு கைத்தறித்துறை அமைச்சர்* அவர்களின் கவனத்திற்கு எடுத்துச்சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நெசவாளர்களின் பாதுகாவலர் *நமது தமிழக முதல்வர் அவர்கள்* தான் எனக் கூறினார். அதனைத் தொடர்ந்து MLA அவர்கள் சேலை நெய்வதையும் ராட்டை நெய்வதையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் நகர பொறுப்பாளர் (தெற்கு)  ராமமூர்த்தி கைத்தறி ஆய்வாளர் நாகராஜ்  மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ரோகினிநாகேஷ்வரன், குருசாமி  வார்டு செயலாளர்கள் ராஜேந்திரபிரபு அழகர் பழனிகுரு கழக நிர்வாகிகள் காளிராஜ் திருவள்ளூவர் புதியராஜ் உதுமான் நாகேஷ்வரன் மாரிமுத்து   கழக நிர்வாகிகள் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News