திருமங்கலம் முதல் இராஜபாளையம் வரை அமைய இருக்கும் நான்கு வழிச்சாலை குறித்து திட்டப் பொறியாளர் பிரபாகரன் அவர்களுடன் MLA S.தங்கப்பாண்டியன் ஆய்வு
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
திருமங்கலம் முதல் இராஜபாளையம் வரை அமைய இருக்கும் நான்கு வழிச்சாலை குறித்து திட்டப் பொறியாளர் பிரபாகரன் அவர்களுடன் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று நண்பகல் 12 மணியளவில் ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின் போது MLA அவர்கள், திருமங்கலம் முதல் இராஜபாளையம் வரையுள்ள 71.600 கி.மீ-ல் இரண்டு பேக்ஸ்சாக பணிகள் நடைபெறவுள்ளது அதில் முதலில் 541 கோடி ரூபாய் மதிப்பில் திருமங்கலம் முதல் வடுகப்பட்டி வரையும் இரண்டாவதாக 723 கோடி ரூபாய் மதிப்பில் வடுகப்பட்டி முதல் இராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி வரையும் நான்கு வழிச்சாலை அமையவுள்ளது எனவும் இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது விரைவில் ஒர்க் ஆடர் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டும், டெண்டர் கால அளவான இரண்டு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் எனக் கூறினார்.
மேலும் MLA அவர்கள் சட்ட மன்ற உறுப்பினரானது (2016) முதல் இன்று வரை இராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் நலனுக்காக திருமங்கலம் முதல் இராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலையை விரைவில் அமைக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வட்டாட்சியர் ராமச்சந்திரன் நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உதவிப்பொறியாளர் சதீஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments