Loading . . .




என் தொகுதி என் மக்கள் வீடு வீடாகச் சென்று மக்கள் குறைதீர்ப்பு. ராஜபாளையம் MLA தங்கபாண்டியன்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

 இராஜபாளையம் தொகுதியில்* உள்ள அனைத்து கிராமங்களிலும் முகாம் அமைத்து பொதுமக்களை  நேரடியாக சந்தித்துவரும் MLA அவர்கள்  (20.05.2022) காலை 10 மணியளவில்  மீனாட்சியாபுரம்  ஊராட்சியில்      *முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்* பிறந்த நாளை முன்னிட்டு  *மக்கள் பிரதிநிதிகளின்  மக்கள் சந்திப்பு இயக்கம்* என்ற தலைப்பில்  *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தெருத்தெருவாக வீடு வீடாக சென்று *பொதுமக்களை நேரடியாக* சந்தித்து அவர்களின் குறைகளையும் மனுக்களையும்  பெற்று  *தீர்வு காண நடவடிக்கை*  மேற்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் MLA அவர்கள்,  பெட்டிக்கடைகாரர்  சரோஜா அவர்களிடம்  தங்களின் வியாபாரம் எப்படி உள்ளது  *திமுக ஆட்சி* எவ்வாறு உள்ளது எனக் கேட்டார் அதற்கு கடைகாரர்கள் இந்த *ஆட்சி நிரந்தரமாக நடைபெறவேண்டுமெனவும்* ஆட்சியில் ஏழை எளிய பொதுமக்கள்  சிறப்பாக வாழ்ந்துவருவதாகவும்  கடைக்கு பலசரக்கு வாங்க அரசு பேருந்தில் மீனாட்சியாபுரத்திலிருந்து இராஜபாளையம் வரை இலவசமாக சென்றுவருவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது  இதனால் மூலம் *இராஜபாளையம் தொகுதி தினந்தோறும் ஆயிரக்கனக்கான பெண்கள் பயனடைந்து* வருவதாக கூறினார். 

 அதனைத் தொடர்ந்து இம்முகாமில்  *இலவசமாக ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் தொலைபேசி எண் இணைத்தல் புதியதாக ஆதார் அட்டை எடுத்தல் மற்றும் புதிய ரேசன் கார்டு* விண்ணப்பித்தல் போன்ற சேவைகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

   இந்நிகழ்வில்  மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி நாடார்  உறவின்முறை தலைவர் ஜெயராஜ்    ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியசாமி  கிளை செயலாளர் ஆரோக்கியம் ஜெயராஜ் வனக்காமுடி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து   கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News