Loading . . .




இராஜபாளையம் தொகுதியில் உள்ள விவசாய பெருமக்களுக்கு விவசாய கடன் பயிர் கடன் போன்ற உதவிகளைநலத்திட்ட வழங்கினார்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

*தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை* சார்பாக விருதுநகர் மாவட்டம் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை *தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள்* காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து விவசாய பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்நிகழ்வில் *இராஜபாளையம் தொகுதி* தெற்கு  வெங்காநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்   *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* கலந்து கொண்டு பேசுகையில்

 நேற்றைய தினம் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக  கேரளா கொல்லத்திற்கு சென்றிருந்தேன் அங்கு எனது சட்டை பையில் *தமிழக முதல்வர் அவர்களின் புகைப்படம்* இருப்பதை பார்த்தவர்கள் இந்தியாவிலே சிறந்த முதல்வர் சிறப்பாக செயல்படக்கூடிய முதல்வர் அவர்கள் என பாராட்டினார்கள் அத்தகைய தருணம் முதல்வர் அவர்களின் புகழும்  தமிழர்களின் பெருமையையும் நினைத்து மிக்க மகழ்ச்சி அடைந்த தருணம் எனக்கூறினார்

 மேலும் விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போட்டு அனைத்து கிராமத்திலுள்ள *விவசாயிகளும் வளர்ச்சி அடைய வேண்டுமென குறிக்கோள் வைத்து நமது தமிழக அரசு செயல்பட்டு* வருகிறது எனக் கூறினார்

 மேலும் இராஜபாளையம் தொகுதியில் உள்ள விவசாய பெருமக்களுக்கு விவசாய கடன் பயிர் கடன் போன்ற உதவிகளை பெற்றுத்தந்து விவசாயிகளின் வளர்ச்சிக்கு எப்போது தான் உறுதுணையாக இருப்பேன் எனக் கூறி விவசாயிகளுக்கு  MLA அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் உதவி இயக்குனர் பத்மாவதி  ஊரக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் வேளாண்மைத்துறை அலுவலர்கள் தனலட்சுமி சுருளி கார்த்திக் தோட்டக்கலைத்துறை கலைவாணி நீர்வளத்துறை பொறியாளர் சந்திரமோகன் கால்நடை துறை அதிகாரிகள் விவசாய பெருமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News