Loading . . .




100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரியும்போது விபத்து MLA S.தங்கப்பாண்டியன் * ஒன்றிய *சேர்மன் G.சிங்கராஜ் நேரில் ஆறுதல்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

*இராஜபாளையம் தொகுதி* சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் நேற்று முன்தினம்  100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணிபுரியும்போது  விபத்து ஏற்பட்டு மூக்கம்மாள், காளியம்மாள், காளியம்மாள், மாரியம்மாள், கருப்பாயி, வடகாசி என்ற ஆறு பெண்களும் *தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி* அறிந்து தென்காசிக்கே நேரில் சென்று  *MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும்* ஒன்றிய *சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும்* மருத்துவத்துறை இணை இயக்குனர்  செல்வராஜ் அவர்கள் முன்னிலையில் இன்று நண்பகல் 1 மணியளவில்  பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள் மேலும் MLA அவர்கள், JD அவர்களிடம்  விபத்தானவர்களின் உடல்நலம் குறித்து கேட்டார் அதற்கு JD அவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ளார்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் எனக் கூறினார் மேலும்  மருத்துவர்களிடம் எனது இராஜபாளையம் தொகுதியை சார்ந்த பெண்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் அதனைத்தொடர்ந்து MLA அவர்களும் சேர்மன் அவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு பழங்களையும் நிதி உதவியையும் வழங்கினார்கள்.

 இந்நிகழ்வில் மருத்துவர்கள்  பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News