Loading . . .




300 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட மன்றஉறுப்பினரின் 8,9,10 மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் மதிப்பீட்டில் தலா ரூபாய் 1000 ஐ நிதி உதவியாக இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் * வழங்கினார்.

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

*இராஜபாளையம் தொகுதியில்*  இன்று (29.05.2022)   *செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்* 99 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதியில் உள்ள 300 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட மன்றஉறுப்பினரின் 8,9,10 மாத ஊதியத்திலிருந்து 3,15,000 ரூபாய் மதிப்பீட்டில் தலா ரூபாய்  1000 ஐ நிதி உதவியாக   இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் *  வழங்கினார்.


 இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,  தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஓயாமல் உழைத்து கொண்டிருந்தவர் *முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான்* அவர்வழியில் எங்கள் *தமிழக முதல்வர் அவர்கள்* தமிழின் வளர்ச்சிக்காகவும் தமிழர்களின் வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறார் எனவும்

 தற்போது பாரத பிரதமர் அவர்கள் தமிழகத்திற்கு வருகைபுரிந்தபோது  தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் & தமிழ் மொழியின்  வளர்ச்சிக்காகவும் நமது *தமிழக முதல்வர் அவர்கள்*

 1.கச்சத்தீவை மீட்ட வேண்டும்

 2. நிலுவையில் உள்ள GST வரியை உடனடியாக வழங்கவேண்டும்

 3.பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகராக அலுவல் மொழியாகவும் உயர்நீதி மன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும்

 4.நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்

 5.மத்திய அரசின் நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என முக்கிய ஐந்து கோரிக்கைகளை வைத்தார் என்பது குறிப்பிடதக்கது


 மேலும் பேசிய MLA அவர்கள் *இராஜபாளையம் தொகுதியில் கலைஞர் அவர்களின்* பிறந்த நாளை முன்னிட்டு வரும் மாதம் முழுவதும் *50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்* பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது எனவும்  இனிவரும் சட்ட மன்ற உறுப்பினர் ஊதியத்திலிருந்து தொகுதியில்  உயர்கல்வி பயில இருக்கும் ஏழை எளிய  மாணவ மாணவியர்களில் அந்த பகுதியிலுள்ள கிளைச்செயலாளர் வார்டு செயலாளர்கள் ஒன்றிய நகர செயலாளர்களின் பரிந்துரையின்படி 25 மாணவ மாணவியர்களை தேர்வு செய்து *கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின்  படிப்பு செலவை முழுவதுமாக  ஏற்க* உள்ளதாக கூறினார்.


இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய விருந்துணவு வழங்கப்பட்டது.


   இந்நிகழ்வில் நகர சேர்மன் பவித்ராஷியாம் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா  பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ் ஷியாம் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன்  பேரூர் கழக செயலாளர் இளங்கோவன்  ஒன்றிய நகர பேரூர்   கழக நிர்வாகிகள் கவுன்சிலர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News