வளர்ச்சி திட்டப்பணிகளான ஆய்வு - M.குமார் MP அவர்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில்
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
*இராஜபாளையம் நகராட்சியில்* நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் பாதாள சாக்கடைத்திட்டப்பணிகள் ரயில்வே மேம்பாலப்பணிகள் குறித்து *தனுஷ் M.குமார் MP அவர்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தலைமையில் நகராட்சி சேர்மன் A.A.S.பவித்ரா ஷியாம் அவர்கள் முன்னிலையில் இன்று (30.05.2022) காலை 11 மணியளவில் ஆய்வுக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்
1.தாமிரபரணி கூட்டுக்குடிநீர்த்திட்டப்பணிகள் குறித்து பேசுகையில்
குடியிருப்பு மற்றும் வணிகப்பயன்பாடுகளை சேர்த்து 48,000 குடிநீர் இணைப்புகள் உள்ளது இதில் 39,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது மீதமுள்ள 9000 குடிநீர் இணைப்புகள் ஆகஸ்ட் மாததத்திற்குள் வழங்கப்படும் எனவும் குடிநீர் கட்டணம் சதுரஅடி -ன் படி கணக்கீடு செய்யப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் *குடிநீர் கட்டணம் அதிகமாக உள்ளதாக பொதுமக்களிடமிருந்து MP, MLA அவர்களுக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளதால் அதனை குறைக்க நகராட்சியில், வீட்டுப்பயன்பாட்டிற்கு 100 ரூபாயாகவும் வணிக பயன்பாட்டிற்கு 200 முதல் 300 யாக நிர்ணயம் செய்து தீர்மானம்* வைத்து சென்னையிலுள்ள நகராட்சிகளின் ஆணையாளர் அவர்களின் அனுமதிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் *இராஜபாளையம் நகராட்சிக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் இந்தாண்டுக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு* வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
2.பாதாள சாக்கடை த்திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுத்தப்பட்டது
3. இராஜபாளையம் பச்சமடம் பகுதியில் செயல்பட்டுவரும் குப்பைகளை பிரித்து உரமாக மாற்றும் நுண்ணுர செயலாக்க மையத்தை வேறுஇடத்திற்கு மாற்றிடவும்
அந்த இடத்தில் *ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் MP நிதியில் 1 கோடியும் MLA நிதியில் 1 கோடியும் பொதுநிதியில் 2 கோடியும் மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குளிர்சாதன (A/C) திருமண மண்டபம்* அமைக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது, அதுபோல் செட்டியார்பட்டி சேத்தூர் மற்றும் கிராமப்பகுதிகளிலும் இதுபோல் திருமண மண்டபம் அமைக்கப்படும் என MLA அவர்கள் கூறினார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா துணை சேர்மன் கல்பனாகுழந்தைவேலு மேம்பாலப்பணி கோட்டப்பொறியாளர் லிங்குசாமி நகராட்சி பொறியாளர் ராமலிங்கம் தாமிரபரணி திட்டப்பணி AE கற்பகம் பாதாளசாக்கடைத்திட்டப்பணி உதவி நிர்வாக பொறியாளர் காளிராஜன் வருவாய்த்துறை ஆய்வாளர் வேல்ப்ரியா மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments