பிறந்த நாளை முன்னிட்டுஇராஜபாளையம் நகர் பகுதிகளில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
03.06.2022 *செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்* 99 வது பிறந்த நாளை முன்னிட்டு இராஜபாளையம் தொகுதி, சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி கலைஞர் படிப்பகம், சேத்தூர் பேரூராட்சி மற்றும் இராஜபாளையம் நகர் பகுதிகளிலும் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் கழக கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில்
பேசிய MLA அவர்கள், தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் ஓய்வில்லாமல் உழைத்தவர் *முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்* அவர்களே. மேலும்
*இராஜபாளையம் தொகுதியில் கலைஞர் அவர்களின்* பிறந்த நாளை முன்னிட்டு ஜுன் மாதம் முழுவதும் *50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில்* பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட உள்ளது. அதன்படி மேலபாட்டம் கரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகர் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்புக், இனிப்புகள் வழங்கினார். இதையடுத்து செட்டியார்பட்டி பேரூராட்சியில் 5000 நபருக்கு அன்னதான நிகழ்ச்சியை MLA அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர செயலாளர் ராமமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் சேத்தூர் சேர்மன் பாலசுப்பிரமணியன் செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன் ஓன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் செட்டியார்பட்டி நகர செயலாளர் இளங்கோவன் செட்டியார்பட்டி துணை சேர்மன் விநாயகமூர்த்தி சேத்தூர் துணைசேர்மன் மா. காளீஸ்வரி,சேத்தூர் பொருளாளர் சீனிவாசன் வார்டு கவுன்சிலர் கழக நிர்வாகிகள் கிளை செயலாளர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
0 Comments