இராஜபாளையம் தொகுதி தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தைMLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதி தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று காலை (06.06.2022) 10 மணியளவில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், கடந்த ஆட்சியில் இராஜபாளையம் தொகுதியில் இரண்டு இடங்களில் நெல்கொள்முதல் செயல்பட்டது தற்போது கழக ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என ஐந்து இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது எனவும் தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும் *திமுக ஆட்சி அமைந்து மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சரானது* முதல் தமிழ்நாடு மிகவும் சொழிப்பான மாநிலமாகவும் இராஜபாளையம் தொகுதியில் இரண்டு வெள்ளாமை பார்க்கும் அளவிற்கு கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் வசதி உள்ளது இதனால் விவசாயமும் விவசாயிகளும் வளர்ந்து வருகின்றனர் எனக் கூறினார் . இந்நிகழ்வில் அலுவலர் செந்தில்குமார் அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments