Loading . . .




இராஜபாளையம் தொகுதியில் (14.06.2022) காலை கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியர்களை சந்தித்து MLA S.தங்கப்பாண்டியன்வாழ்த்துக்கள் கூறினார்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (14.06.2022) காலை கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியர்களை சந்தித்து வாழ்த்துக்கள் கூற சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் மேலப்பாட்டகரிசல்குளம் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* நேரில் சென்று  மாணவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் கூறி அனைவரும் சிறப்பாக படிக்க வேண்டுமென கூறினார், 

மேலும் மாணவர்களை சந்திக்க வகுப்பறைக்கு செல்லும்போது வகுப்பில் போதிய வெளிச்சம் இல்லாதை அறிந்து *MLA அவர்கள் தனது சொந்த செலவில் வகுப்பறைக்கு தேவையான வின்விளக்கு வசதி மின்விசிறி வசதி செய்துதரப்படும்* எனக்கூறினார், மேலும் பள்ளிக்கு என்னென்ன வசதி வேண்டுமென மாணவர்களிடம் தலைமை ஆசிரியர்களிடம் கேட்கையில் ஒன்பதாம்&பத்தாம் வகுப்பு மாணவர்கள் சீருடை வேண்டுமென கூறினார்கள் அதற்கு MLA அவர்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு தலைமை ஆசிரியரின் பரிந்துரையின்படி சீரூடை வழங்கப்படும் எனக்கூறினார், மேலும் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு *குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் மாணவர்கள் இருக்கை வசதியும் வேண்டுமென கோரிக்கை வைத்தார் உடனே MLA அவர்கள் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து* கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறினார், அதனைத்தொடர்ந்து பேசிய MLA அவர்கள் மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க எந்தெந்த மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என கண்டறிந்து அவர்களது வீட்டிற்கே சென்று படிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டுமென தலைமை ஆசிரியர் அவர்களிடம் கேட்டுக் கொண்டார், இந்தியாவிலேயே *கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் முதல்வர் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்* தான் எனக்கூறினார்.

மேலும் திருவள்ளுவர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் ராக்கேஷ் என்ற மாணவரை தமிழின் இனிமைப் பாடலை வாசிக்கச் சொல்லி வாசிப்பு திறனை MLA அவர்கள் கேட்டறிந்து சிறப்பாக வாசிப்பதாகவும் சிறப்பாக படிக்க வேண்டுமென வாழ்த்துக்கள் கூறினார் மேலும் குழந்தைகளுக்கு புதிய புத்தகங்களை அவர்கள் வழங்கினார்.

 இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் குணசீலன்,ஜெயலட்சுமி நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் கிளை செயலாளர் அங்குராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News