இராஜபாளையம் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம்* சக்தி கண் மருத்துவமனை அருகில் நேற்று இரவு 8.30 மணியளவில் அரசு பேருந்தும் டாடாஏசி வாகனமும் மோதி விபத்தானதை அறிந்த *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* உடனடியாக நேரில் சென்று விபத்தில் காயமடைந்த வேல்முருகன் மகேந்திரன் சிவபாலன் சுரேஷ்குமார் திருமலைக்குமார் போன்றவர்களை பொதுமக்களுடன் மற்றும் காவல்த்துறையினருடன் மீட்டு இராஜபாளையம் PACR அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார், மேலும் *இன்று (16.06.2022) காலையும் MLA அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்* அதற்கு மருத்துவர் அவர்கள் காயமடைந்த அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் திருமலைக்குமார் என்பவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளதாகவும் அவரும் நலமுடன் இருப்பதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பேசிய MLA அவர்கள், விபத்து நடந்தவுடன் துரிதமாக செயல்பட்ட காவல்த்துறையினருக்கும் மருத்துவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் சுரேஷ் நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் இருந்தனர்.
0 Comments