இராஜபாளையம் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் மாபெரும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் செம்மொழி நாயகர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்* 99 வது பிறந்த நாளை முன்னிட்டு *இராஜபாளையம் தொகுதி திமுக* சார்பில் இராஜபாளையம் காமராஜர் திருமண மண்டபத்தில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* தலைமையில் *தனஷ் M.குமார்.,MP அவர்கள்* முன்னிலையில் மாபெரும் *இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண் கண்ணாடி* வழங்கும் விழா (19.06.2022) காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அயராது உழைத்த *முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை* இராஜபாளையம் தொகுதியில் இம்மாதம் முழுவதும் கொண்டுவதில் பெருமை கொள்ளுவதாகவும் *தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர் கலைஞர் அவர்கள் தான்* தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக திகழ காரணமானவர் *கலைஞர் அவர்கள்* தான் கூறினார் அதனைத்தொடர்ந்து பேசிய MP அவர்கள் இராஜபாளையம் தொகுதியை தனது கண்களைபோல் பார்த்துக்கொள்வர் MLA அவர்கள் எனவும் அதுபோல் தொகுதி பொதுமக்களின் கண் பார்வையை பாதுகாக்க இம்முகாமை MLA அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார் எனக் கூறினார்.
இம்முகாமில் 2000க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் கண்ணாடி பெற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் நகராட்சி சேர்மன் A.A.S.பவித்ரா ஷியாம் அவர்கள், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ் ஷியாம்ராஜா அவர்கள் பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன் பாலசுப்ரமணியன் பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன் சிங்கப்புலி அண்ணாவி ஒன்றிய,நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர,ஒன்றிய பேரூர் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், கிளை செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் நகர,ஒன்றிய,பேரூர் கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments