Loading . . .




இராஜபாளையம் தொகுதிமேலூர் துரைசாமியாபுரம் ஊராட்சி களத்தில் புதியதாக நெல் கொள்முதல் நிலையத்தை MLA S.தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதி மேலூர்துரைச்சாமியாபுரம் மற்றும் சொக்கநாதன்புத்தூர்  ஊராட்சிப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று    மேலூர் துரைசாமியாபுரம் ஊராட்சி களத்தில் புதியதாக  நெல் கொள்முதல் நிலையத்தை MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்*  காலை  (30.06.2022) 8 மணியளவில்  தொடங்கி  வைத்தார். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், விருதுநகர் மாவட்டத்தில் பத்து இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது அதில் *இராஜபாளையம் தொகுதியில் மட்டும் ஏழு இடங்களில் நெல்கொள்முதல் நிலையம்* செயல்படுகிறது எனவும்  இதனை ஏற்படுத்தி தந்த *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தொழில்த்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கும்  நன்றியை* தெரிவிப்பதாகவும் 

மேலும் விவசாயத்தின் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பணியாற்றிவருகிறார் எனவும் மேலும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு தயாராக உள்ளது எனக்கூறினார். 

 இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கிளை செயலாளர்கள் அமுதரசன் சீதாராமன்  சின்னதம்மி தங்கப்பன் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சொர்ணம் வேளாண்மைத்துறை அலுவலர் விவசாயப்பெருமக்கள்   மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News