Loading . . .




இராஜபாளையதில் ரூ. 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் புதிய நவீன திருமண்டபம்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோவில்  நிலத்தில் குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்க வேண்டும் என கடந்த வாரம்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களிடம் MLA அவர்கள் கோரிக்கை வைத்தார் அதற்கு அமைச்சர் அவர்கள் மதுரை இணை ஆணையர் அவர்களிடம் கூறி திருமண்டபம் அமைப்பது குறித்து   கோப்புகள் தயார் செய்ய கூறியிருந்தார், அதனைத் தொடர்ந்து    (23.08.2022) காலை 10 மணியளவில் இராஜபாளையம் அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோவில்    அருகில்  கோவில் நிலத்தில் ஏழை எளிய பொதுமக்கள் தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் திருமண மண்டபம் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை மதுரை இணை ஆணையர் (JC) செல்லத்துரை அவர்கள்*தலைமையில்  MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், ஏழை எளிய பொதுமக்கள்   தங்களது வீட்டு சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக  கொண்டாட தனியார் திருமண்டபங்களுக்கு இணையாக  குளிர்சாதன வசதியுடன் நவீன திருமண்டபம் அமைக்க வேண்டுமெனக்கூறினார், மேலும் திருமண மண்டபம் விருதுநகரில் உள்ள மருத்துவக்கல்லூரியில் அமைக்கப்பட்ட   கலந்துரையாடல் அரங்கம் போல் 1000 நபர்கள் அமர்வது போலும், 300 நபர்கள் அமர்வது போல் உணவருந்தும் கூடத்துடன் வரைபடம் அமைக்கப்பட வேண்டும் எனக் கூறினார், மேலும் இச்சிறப்பு வாய்ந்த திருமண்டபம் அமைக்க *இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும்* MLA அவர்கள் கூறினார், 

அதற்கு *இணை ஆணையர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையிலிருந்து 4 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி ஆக மொத்தம்  6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் திருமண்டபம் அமைக்க* வரைபடம் மற்றும் மதிப்பீடு தயார் செய்யப்படும் எனக்கூறினார். 

இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராஜா, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா கவுன்சிலர் செந்தில்குமார், மனோ மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News