Loading . . .




இராஜபாளையம் மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி. MLA S.தங்கப்பாண்டியன்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (08.09.2022) மாலை 4 மணியளவில் கிருஷ்ணாபுரம் பெருந்தலைவர் காமராஜர்  மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு தனுஷ் M.குமார்.,MP அவர்களும்    MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும்* வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,  எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது   கல்வி மட்டுமே அத்தகைய கல்விக்கு  நமது *தமிழக முதல்வர் அவர்கள்*  முக்கியத்தும் கொடுத்து கல்வித்துறையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்,

 அதுபோல் மாணவ மாணவியர்கள் நீங்கள் அனைவரும் சிறப்பாக கல்வி கற்று நமது இராஜபாளையம் தொகுதியிலிருந்து IAS,IPS மருத்துவர் போன்ற உயரிய பதவிகளுக்கும் பொறுப்புகளுக்கும் வரவேண்டுமென  கேட்டுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து பேசிய MP அவர்கள் மற்ற மாநிலத்தைக்காட்டிலும் நமது *தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க காரணம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்ட மதிய உணவு திட்டமே* எனக்கூறினார் மேலும் மாணவ மாணவியர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாமல் விளையாட்டு உடற்பயிற்சி போன்றவற்றிலும் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் பாலாஜிநாடார்  தலைமை ஆசிரியை பேச்சியம்மாள்  மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி கவுன்சிலர் காமராஜ்   கிளை செயலாளர்  லட்சுமணன் ஒன்றிய இளைஞரணி து.அமைப்பாளர் மாரிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவியர்கள் ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News