இராஜபாளையம் கலங்காபேரி ஊராட்சிக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் இன்று (16.09.2022) காலை 11 மணியளவில் திருவில்லிபுத்தூர் ஒன்றியம் *கலங்காபேரி ஊராட்சிக்கு ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக ஊராட்சி மன்ற அலுவலகம்* கட்டப்பட்டு அதனை MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும்* ஒன்றிய *சேர்மன் மல்லி ஆறுமுகம் அவர்களும்* திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் கலங்காபேரி ஊராட்சியில் பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிற்பதில்லை என பொதுமக்கள் MLA அவர்களிடம் புகார் கூறியதையடுத்து உடனடியாக பஸ் டிப்போ மேலாளர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரிய பேருந்து நிறுத்தத்தில் பஸ் நிறுத்த வேண்டுமென MLA அவர்கள் கூறினார்.
இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் சங்கிலிராஜ் கவுன்சிலர் பாக்கியலட்சுமி மாவட்ட பிரதிநிதி அய்யகோன் கிளைச்செயலாளர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments