Loading . . .




இராஜபாளையம் தொகுதியில் மாபெரும் ரத்த தான முகாம் MLA S.தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில் இன்று (17.09.2022) காலை 9.30 மணியளவில் பெருந்தலைவர் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்*  தளவாய்புரம் ரோட்டரி கிளப் மற்றும் மதுரை தேராபந்த் யுவக் பரிஷத் இணைந்து நடத்தும் மாபெரும் ரத்த தான முகாமை MLA,  ஒன்றிய சேர்மன் அவர்கள் தொடங்கி வைத்தனர்.


அதனைத்தொடர்ந்து பு.மூ.மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் பு.மூ.மா.அம்மையப்பநாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் *தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை தனுஷ் M.குமார்.,MP அவர்களும்  MLA S.தங்கப்பாண்டியன் அவர்களும் ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கினார்கள்.*


இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள்,  மாணவ மாணவியர்கள் அனைவரும் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் விளையாட்டிலும் முக்கியத்துவம் வழங்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் கூறினார் மேலும்  *அனைவருக்கும் வாழ்க்கையில் முன்னேற வாய்ப்புக்கள் கிடைக்கும் அதனை சிறப்பாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி* பெறவேண்டுமென கூறினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய MP அவர்கள்  வெற்றியை  எவ்வாறு கொண்டாட வேண்டுமென கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் தோல்வியை எவ்வாறு கையாள வேண்டுமென கற்றுக்கொடுத்து *தோல்வியை வெற்றி படிக்கட்டுகளாக மாற்றவும் கற்றுக்கொடுக்க* வேண்டுமென கூறினார்.

இந்நிகழ்வில் ஊர்த்தலைவர் உதயசூரியன் பள்ளி தாளாளர்கள் S.ரவிச்சந்திரன், பாலாஜி, ராஜ்பாபு தலைமையாசிரியர்கள் தனபால், செலினாபாய் மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் கிளை கழக செயலாளர் தங்கமணி கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News