Loading . . .




இராஜபாளையம் நகரிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியன் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (27.09.2022) மாலை 4 மணியளவில் இராஜபாளையம் நகரிலுள்ள சேத்தூர் சேவுகப்பாண்டியன் அரசு பெண்கள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவியர்களுக்கு     MLA S.தங்கப்பாண்டியன்  அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில்  பேசிய MLA அவர்கள், 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளை காட்டிலும் அதிகளவில் மாணவ மாணவியர்கள் சேர்க்கை நடந்துள்ளது உதாரணமாக S.S.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாணவியர்களின் எண்ணிக்கை  600 ஆக இருந்தது தற்போது 904 ஆக உயர்ந்துள்ளது இதற்க்கு முக்கிய காரணம் *நமது தமிழக முதல்வர் அவர்களின்* சீரிய முயற்சியும் மருத்துவப்படிப்பில் 7% இடஒதுக்கீடு அரசுப்பள்ளியில் பயின்ற மாணவியர்கள் உயர்கல்வியை தொடர மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்கள்தான் காரணம் எனக்கூறினார் மேலும் இராஜபாளையம் தொகுதியில் தான் சட்ட மன்ற உறுப்பினராக பொறுப்பேற்றதன்முதல் அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி,  பேவர்பிளாக் தளம் கழிப்பறை வசதி மாணவ மாணவியர்கள் அமரும் இருக்கைகள் போன்ற பல்வேறு வசதிகளை சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார் தொடர்ந்து பேசிய MLA அவர்கள் நடப்பாண்டில் ஆண்டில் *இராஜபாளையம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில்   விளையாட்டு விழா மற்றும் ஆண்டு விழா நிகழ்ச்சி நடத்தி எனது சார்பாக அனைத்து பரிசுப்பொருட்களும்* வாங்கி தரவதாக கூறினார்.  

இந்நிகழ்வில் பள்ளி  தலைமை ஆசிரியர்கள் சிவகுமாரி,  ஜெயச்சந்திரன்    நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா   கவுன்சிலர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்   மாணவ மாணவியர்கள் ஆசிரியப்பெருமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News