Loading . . .




இராஜபாளையம் தளவாய்புரம் ஆ.ச.பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தின் புதிய பொழிவுடன் கூடிய மருத்துவமனை

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (29.09.2022) காலை 10 மணியளவில் தளவாய்புரம் ஊராட்சியிலுள்ள தளவாய்புரம் ஆ.ச.பழனிச்சாமி நாடார் சுகாதார கூட்டுறவு சங்கத்தின் புதிய பொழிவுடன் கூடிய மருத்துவமனையை விருதுநகர் இணை பதிவாளர் பா.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்  திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து *1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 49 பயனாளிகளுக்கு* மாற்றுத்திறனாளி கடன், விவசாயக்கடன், மகளிர் சுய உதவிக்கடன் மற்றும் சிறுதொழில் கடன் வழங்கும் அனுமதி ஆணைக்கடிதத்தை MLA அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள், இச்சிறப்பு வாய்ந்த மருத்துவமனை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை *அமைச்சர் KKSSRR அவர்கள் திறப்பதாக* இருந்தது, ஆனால் அவசர பணி காரணமாக * தமிழக முதல்வர் அவர்களை* சந்திக்கவுள்ளதால் இந்நிகழ்ச்சிக்கு அமைச்சர் அவர்களால் வரமுடியவில்லை, அவர்சார்பாக இம்மருத்துவமனையை தான் திறந்து வைத்துள்ளதாக கூறினார், மேலும் *இம்மருத்துவமனை தரம் உயர்த்த தான் அனைத்துவகையிலும் உறுதுணையாக இருப்பதாக அமைச்சர் அவர்கள்* உறுதியளித்துள்ளார் எனக்கூறினார், தொடர்ந்து பேசிய MLA அவர்கள் அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட *இம்மருத்துவமனை திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது* எனக்கூறினார் மேலும்  இக்கூட்டுறவு மருத்துவமனையை ஜமீன் கொல்லங்கொண்டானில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தப்படும் எனக்கூறினார் மேலும் இக்கூட்டுறவு மருத்துவமனையை சுகாதார துறையின் இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அக்கோரிக்கையும் பரிசீலனையில் உள்ளது, இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும் கூட்டுறவு துறையின் கீழ் இம்மருத்துவமனை சிறப்பாக செயல்பட அனைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  இதனால் ஆயிரக்கனக்கான ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறுவார்கள் எனக்கூறினார். 


 இந்நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்கள்  நகர செயலாளர்கள் ராமமூர்த்தி மணிகண்டராஜா அவர்கள், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் பேரூர் சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன் மருத்துவமனை நிர்வாக தலைவர் பழனிசாமி மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி  கவுன்சிலர்கள் மருத்துவர்கள் , செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள், வார்டு & கிளைக் கழக செயலாளர்கள் பொதுமக்கள் மற்றும் நகர , ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News