இராஜபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
The Forecast 3 years ago தங்கபாண்டியன்
இராஜபாளையம் தொகுதியில் (30.09.2022) காலை 10 மணியளவில் ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை நமது மக்கள் *MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்* வழங்கினார்.
இந்நிகழ்வில் பேசிய MLA அவர்கள் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனவும் பிறந்த குழந்தைகளின் வளர்ச்சி மட்டும் கருத்தில் கொள்ளாமல் *வயிற்றில் உள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடுயின்றி ஆரோக்கியமாகவும் வளர* வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு *ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஒரே முதல்வர் நமது தமிழக முதல்வர் அவர்கள்* எனவும் கர்ப்பிணி பெண்களுக்கு பார்த்து பார்த்து பல்வேறு நலத்திட்டங்களை செய்துவரும் முதல்வர் *நமது தமிழக முதல்வர் அவர்கள்* தான் எனக்கூறினார், மேலும் ஆயிரக்கனக்கான ஏழை எளிய கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் இம்மருத்துவமனையின் வளர்ச்சிக்கு தான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் எனக்கூறினார்.
இந்நிகழ்வில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கிளைச்செயலாளர் வனராஜ் ஒன்றிய கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, மருத்துவர்கள் செவிலியர்கள் கர்ப்பிணி பெண்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
0 Comments