Loading . . .




இராஜபாளையம் தொகுதியில் இலவச கண் சிகிச்சை முகாம் MLA S.தங்கப்பாண்டியன்தொடங்கி வைத்தார்.

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்  (02/10/2022) காலை 10.00 மணியளவில் செட்டியார்பட்டி மிராசு வீரப்ப நாயுடு வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட பார்வை தடுப்பு சங்கம் மற்றும் சக்தி கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் ராதா மருத்துவமனையின் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமினை பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் அவர்களும்  MLA S.தங்கப்பாண்டியன்அவர்களும் தொடங்கி வைத்தனர்.



அதனை தொடர்ந்து  முகவூர் ஊராட்சி, அம்பாள் கலாநிலையம் தொடக்கப்பள்ளியில் *மரக்கன்று நட்டு* முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து நமது *மக்கள் MLA S.தங்கப்பாண்டியன்* அவர்கள் தலைமையில் *பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார்* அவர்கள் முன்னிலையில் *கிராமசபை கூட்டம்* நடைபெற்றது. 

மேலும் இந்நிகழ்வில் பொதுமக்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்தனர். 

அதற்கு நமது MLA அவர்களும் MP அவர்களும் உடனே இந்த பிரச்சனைகளை  BDO அவர்கள் மூலம் உடனடியாக தீர்த்து வைக்கப்படும் எனக்கூறினார். 

அதனை கேட்ட பொதுமக்கள் அனைவரும் MP அவர்களுக்கும் MLA அவர்களுக்கும் நன்றி கூறி இக்கிராமசபை கூட்டத்திலிருந்து மகிழ்ச்சியுடன் சென்றனர்.


இந்நிகழ்வில் மருத்துவர் ரவிக்குமார், செட்டியார்பட்டி சேர்மன் ஜெயமுருகன், பேரூர் கழக செயலாளர் இளங்கோவன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுரேஸ், ஒன்றிய கவுன்சிலர் மகேஸ்வரி தொந்தியப்பன், 

முகவூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியசாமி, ஊராட்சி கிளர்க் பால்வண்ணன், 

மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மாலதி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபாகரன், இராமேஸ்வரன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News