Loading . . .




இராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோவிலுக்கு செல்ல பாலம் அமைக்க நடவடிக்கை

The Forecast 3 years ago தங்கபாண்டியன்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் முக்கிய கோரிக்கையாக உள்ள இராஜபாளையம் நீர்காத்த அய்யனார் கோவிலுக்கு செல்ல  பாலம் அமைக்க   அவ்விடத்திற்கு நேரில் சென்று மதிப்பீடு மற்றும் அறிக்கை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அவர்கள்  அறிவுறுத்தியதின் அடிப்படையில் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர் ஜான்சி அவர்கள்  வனச்சரக காப்பாளர் கார்த்திக் அவர்கள் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முத்துமுனிகுமாரி  அவர்களுடன்  (15.10.2022)  காலை 9 மணியளவில்  ஆய்வு மேற்கொண்டனர். 


 ஆய்வின்போது அதிகாரிகளுடன் பேசிய MLA அவர்கள் , பக்தர்களின் 50 வருட கோரிக்கையை நிறைவேற்ற நீர்காத்த அய்யனார் கோவிலுக்கு பக்தர்   நடந்து செல்லும் வகையில்   பாலம் அமைக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார், மேலும் இப்பணியை எந்தத்துறையிலிருந்து மேற்கொள்ளலாம் என ஆலோசனை செய்கையில் இதுபாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் வனத்துறையிலிருந்து மட்டுமே பாலம் அமைக்கப்படும் என வனச்சரக காப்பாளர் கூறியதை அடுத்து MLA அவர்கள் வனத்துறை சார்பாகவே திட்ட அறிக்கை தயார் செய்து அனுப்புமாறும் அதனை தான்  தமிழக முதல்வர் அவர்களின்* கவனத்திற்கு கொண்டுசென்று நிதி ஒதுக்கீடு செய்து பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ள உறுதுணையாக இருப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் நகர செயலாளர் (வடக்கு) மணிகண்டராஜா மற்றும்  துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News