Loading . . .




இராஜபாளையம் 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளிக்கு புத்தாடை- MLA S.தங்கப்பாண்டியன்

Arut Selvan 3 years ago தங்கபாண்டியன்

இராஜபாளையம் தொகுதியில்   (16.10.2022) காலை 10 மணியளவில் பொன்னகரத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம், மருதுநகரில் உள்ள Light of life குழந்தைகள் காப்பகம் மற்றும் சேத்தூரில் உள்ள அருளோதயம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் என *3 காப்பகத்தில் உள்ள 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு  ஐந்து வருடங்களாக  தீபாவளிக்கு புத்தாடை வழங்குவது போல் தற்போதும் *ஆறாவது முறையாக அக்குழந்தைகளை இராஜபாளையம் ஆனந்தம் சில்க்ஸ் ஜவுளி கடைக்கு*  அழைத்து வந்து   MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள்*  தனது *11,12,13  வது மாத  ஊதியத்திலிருந்து  ( ரூபாய் 3,15,000) குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை குழந்தைகளே பார்த்து பார்த்து மகிழ்ச்சியுடன் தேர்வு* செய்து எடுத்தனர்.  

இந்நிகழ்வில் குழந்தைகளுடன் பேசிய MLA அவர்கள் உங்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பது கல்வி மட்டுமே ஆகவே அனைவரும் சிறந்தமுறையில் கல்வி கற்க வேண்டுமெனவும் *டாக்டர் கலைஞர் அவர்கள் ஆதரவற்ற குழந்தைகளுக்கென  பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார் அதுபோல்  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்   ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவாக இருந்து* அவர்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுவார் மேலும்  *ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் K.K.S.S.R.இராமச்சந்திரன் அவர்களும் தங்கம் தென்னரசு   அவர்களும் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினராகிய நானும்* இராஜபாளையம் தொகுதி பொதுமக்களும் அன்றும் இன்றும் என்றும் உறுதுணையாக இருப்போம் எனக் கூறினார், அதனைத்தொடர்ந்து குழந்தைகளை கவனமாக காப்பகத்திற்கு செல்லுமாறும் தீபாவளி திருநாளை அனைவரையும்போல்  மகிழ்ச்சியாக கொண்டாடிட வேண்டுமெனவும் *நீங்கள் ஆதரவற்ற குழந்தைகள் அல்ல அனைவரின் ஆதரவையும் பெற்ற குழந்தைகள்* எனக்கூறி   MLA அவர்கள் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார், 

இந்நிகழ்ச்சியில்  நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் கவுன்சிலர்கள்  கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

0 Comments

Post your comment here

தங்கபாண்டியன் Relateted News