மகளிருக்கான கட்டணமில்லா நகரப்பேருந்து பயணத்திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்
The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை
(14.11.2022) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் .எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள், மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் தலைமையில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுடன், மகளிருக்கான கட்டணமில்லா நகரப்பேருந்து பயணத்திட்டம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. உடன் மாநிலத் திட்டக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினர் முனைவர் டி.ஆர்.பி ராஜா, போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., போக்குவரத்துத் துறை அரசு சிறப்புச் செயலாளர் .தி.ந.வெங்கடேஷ், இ.ஆ.ப., மாநிலத் திட்டக்குழு செயலாளர் திரு.டி.எஸ்.ராஜசேகர், இ.ஆ.ப., மாநிலத் திட்டக்குழு கூடுதல் (முழு நேர) உறுப்பினர் பேராசிரியர் எம்.விஜயபாஸ்கர், போக்குவரத்து கழகங்களின் அலுவலர்கள் மற்றும் மாநிலத் திட்டக்குழு அலுவலர்கள் உள்ளனர்.
0 Comments