Loading . . .




பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932 சிறப்பு பஸ்கள்

The Forecast 3 years ago போக்குவரத்துத்துறை

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 16,932  சிறப்பு பஸ்கள் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்ேவறு பகுதிகளில் இருந்து  இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொங்கல்  சிறப்பு பேருந்துகள்  இயக்கம் மற்றும் துறை சார்பில் மேற்கொள்ளப்படும்  சிறப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்  போக்குவரத்துத்துறை  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில்  போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், ஆணையர், அனைத்து  போக்குவரத்து கழக  மேலாண்மை இயக்குனர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள்  மற்றும் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு வரும் ஜன.12ம் தேதி முதல் 14ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு  சென்னையிலிருந்து 4,449 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,183  சிறப்பு பேருந்துகளும் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,749 சிறப்பு  பேருந்துகளுடன், சென்னையிலிருந்து தினமும் இயக்கப்படும் 2,100  பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல பொங்கல்  பண்டிகை முடிந்த பின் ஜன. 16ம் முதல் 18ம் தேதிவரை தினசரி இயக்கப்படும்  2,100 பேருந்துகளுடன், சென்னை திரும்ப 4,334 பேருந்துகளும், மற்ற  ஊர்களுக்கு 4,965 பேருந்துகள் என கூடுதலாக 9,319 சிறப்பு பேருந்துகளும் என  மொத்தமாக 15,599 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. சிறப்பு பேருந்துகளில்  பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் 3 இடங்களில்  12 முன்பதிவு மையங்கள்  அமைக்கப்படும்.  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10  முன்பதிவு மையங்களும்,  தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையம்  மற்றும் பூந்தமல்லி  பேருந்து நிலையத்தில் தலா ஒரு முன்பதிவு மையம் என  மொத்தம் 12 முன்பதிவு  மையங்கள் செயல்படுகின்றன. மேலும் www.tnstc.in என்கிற  இணையதளம்  மூலமாகவும், tnstc செயலி மூலமாகவும் செய்யலாம்.மேலும், பேருந்துகளின்  இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், இயக்கம்  குறித்து  தெரிவிப்பதற்கும் ஏதுவாக 94450 14482, 94450 14436 ஆகிய தொலைபேசி  எண்களில்  24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக  கட்டணம்  வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044-2474  9002,  044-2828 0445. 044-2628 1611 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில்  தொடர்பு  கொள்ளலாம். பயணிகளின் நலனுக்காக பேருந்து நிலையத்தில்  அமைக்கப்பட்டுள்ள  கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும்.பேருந்து  நிலையங்களுக்கு  வருகை தரும் பயணிகள் பேருந்து மற்றும் வழித்தடம் குறிக்க  விவரங்களை  அறிந்து கொள்ள எதுவாக 20 இடங்களில் தகவல் மையங்கள் அமைத்திட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.மேலும் பொதுமக்களின்  வசதிக்காக போயம்பேடு பேருந்து  நிலையத்திலிருந்து 4 பேருந்து நிலையங்களுக்கு  செல்ல ஏதுவாக  மாநகர்  போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப்  பேருந்துகள் 24 மணி நேரமும்  இயக்கப்படும். சென்னையில் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், கோயம்பேடு,  பூந்தமல்லி ஆகிய 5  பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்ல சிறப்பு  பேருந்துகள்  இயக்கப்படுகிறது.


0 Comments

Post your comment here

போக்குவரத்துத்துறை Relateted News