Loading . . .




கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி - எடியூரப்பா

The Forecast 3 years ago கர்நாடகா

பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- நான் தேர்தல் அரசியலில் இருந்து தான் ஓய்வு பெற்றுள்ளேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்காக மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். வீரசைவ லிங்காயத் சமுதாய மக்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன், நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவு சுயமாக எடுத்ததாகும். எனவே பா.ஜனதாவுக்கு முழு ஆதரவை அளிக்கும்படி வீரசைவ லிங்காயத் சமுதாய மக்களை கேட்டுக் கொள்கிறேன். வருகிற 27-ந் தேதி எனக்கு 80 வயதாகிறது. இந்த காரணத்திற்காகவும் சுயமாக முடிவு எடுத்து தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷாவின் தலைமையால் பெரிய சக்தியே கிடைத்திருக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. இது 100 சதவீதம் நடந்தே தீரும். சித்தராமையா மீதான குற்றச்சாட்டு குறித்து முதல்-மந்திரியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.


0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News