கர்நாடக மாநிலத்தில் ஆட்சியை இழந்துள்ள பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசில் அமைச்சர்களாக இருந்த 14 பேர், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
அவர்களின் விவரம் (போட்டியிட்ட தொகுதி அடைப்புக்குறிக்குள்): கோவிந்தா கர்ஜோல்
(முதோல்), ஜெ.சி.மதுசுவாமி
(சிக்கநாயக்கனஹல்லி), பி.சி.பாட்டீல் (ஹிரேகெரூர்), சங்கர் பாட்டீல் முனேனா கோப்பா (நாவல்குண்ட்), ஹலப்பா அச்சார் (எல்புர்கா), பி.ஸ்ரீராமுலு (பெல்லாரி), கே.சுதாகர் (சிக்கபல்லபூர்),
பி.சி.நாகேஷ் (திப்தூர்), முருகேஷ நிரானி (பில்கி), எம்.டி.பி.நாகராஜ் (ஹோஸ்கோடே) உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் தேர்தல் தோல்வியைச் சந்தித்துள்ளனர்.
சிர்ஸி தொகுதியில் போட்டியிட்ட மாநில சட்டப்பேரவைத் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான விஸ்வேஷ்வர் ஹெக்டே ககேரி தோல்வியைச் சந்தித்தார்.
வருணா மற்றும் சாமராஜநகர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட அமைச்சர் வி.சோமண்ணா, இரண்டு தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தார்.
அதுபோல, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட மாநில அமைச்சரான ஆர்.அசோகா, பத்மநாபநகர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், கனகபுரா தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.
0 Comments