கழிவுநீர் வாகனங்கள் 15 நாள்களுக்குள் ஆர்.சி புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும்: அரசு உத்தரவு
The Forecast 2 years ago கர்நாடகா
தமிழகத்தில் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் 15 நாள்களுக்குள் வாகன பதிவுச்சான்றிதழில் தங்கள் வகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு
சென்னை உள்பட தமிழகம் முழுவதும், புதை சாக்கடை இல்லாத பகுதிகளில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து கழிவுநீரை எடுத்துச்செல்ல கழிவுநீர் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கழிவுநீர் எடுத்து செல்லப் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவுப் புத்தகத்தில் வாகனத்தின் வகை, கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதியப்பட்டிருக்க வேண்டும்.
எனவே கழிவுநீர் வாகன உரிமையாளர்கள், தங்களது வாகனத்தின் பதிவுச் சான்றிதழில் கழிவுநீர் அகற்றும் வாகனம் என பதிவு செய்யப்படவில்லையென்றால், சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தினை அணுகி பதிவுப் புத்தகம் மற்றும் அனுமதிச் சீட்டில் “கழிவுநீர் அகற்றும் வாகனம்” என உரிய தகுதிச்சான்றுடன் 15 தினங்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். தவறினால், அனுமதிச்சீட்டு ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments