போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையரின் இணையதளம் தற்போது முற்றிலும் தமிழில்
The Forecast 2 years ago போக்குவரத்துத்துறை
போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையரின் இணையதளம் முறைப்படியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள்.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளுக்கான இணையதளங்களை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டதற்கு இணங்க போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையரின் இணையதளம் முறைப்படியாக தமிழில் தயாரிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது.
இந்தத் தமிழ் இணையதளத்தினை முறைப்படி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (13.07.2023) தலைமைச் செயலகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்கள். இந்த நிகழ்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்து (ம) சாலைபாதுகாப்பு ஆணையர் அ.சண்முக சுந்தரம், இ.ஆ.ப., மற்றும் தேசியத் தகவல் மையத்தின் மாநிலத் தகவல் இயல் அலுவலர் ஆண்டனி, தேசிய தகவல் மையத்தின் முதுநிலை இயக்குநர் . ஈஸ்வரன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் தங்களது சேவைகளை எவ்வித சிரமமும் இன்றி பெறும் வகையில் 48 சேவைகளை முழுக்கவும் கணினி மயப்படுத்தி ஆன்லைன் மூலமே பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக ஏற்கனவே கீழ்க்கண்ட 6 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.
Currently in LIVE
1. Hypothecation Addition
2. Transfer of ownership
3. Issue of Learners License
4. Renewal of DL
5. Change of Address in DL
6. Surrender of COVs in DL
மேலும் இதனை அடுத்து 42 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்படும் என்று 2023-24-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக (14.07.2023) கீழ்க்கண்ட 25 சேவைகள் ஆன்லைனில் கொண்டு வரப்படவுள்ளன.
Sarathi Services
1 Issue of Duplicate LL
2. Issue of Duplicate Driving License (DL)
3. Replacement of Driving License.
4. Change of Name in Driving License.
5. Driving License Extract provisioning.
6. Issue of International Driving Permit.
7. Endorsement to Drive Hazardous Material.
8. Renewal of Conductor License.
Vahan Services
9. Application for Temporary Registration of motor vehicle.
10. Application for Registration of motor vehicle with fully built body.
11. Application for issue of duplicate Certificate of Registration (RC).
12. Application for Grant of No Objection Certificate (NOC) for Certificate of Registration.
13. Change in Address in Certificate of Registration.
14. View Registration Certificate (RC) particulars against fee.
15. Termination of hire-purchase agreement.
16. Issue of Fresh Permit.
17. Issue of Duplicate Permit.
18. Permanent Surrender of Permit.
19. Transfer of Permit.
20. Transfer of Permit (Death Case).
21. Renewal of Permit.
22. Renewal of Permit Authorisation.
23. Application for Special Permit
24. Update Mobile Number in record for transport services.
25. Issue of Duplicate Fitness certificate.
மேலும், மீதமுள்ள கீழ்க்கண்ட 17 சேவைகளையும் ஆன்லைனில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தேசிய தகவல் மையம் எடுத்து வருகிறது. இந்த பணிகளும் விரைவில் முடிக்கப்படும்.
SI.No Description
Sarathi Services
1 Change of Address in Learner License.
2 Change of Name in Learner License.
3 Change of Photo and Signature in Learner License.
4 Change of Biometrics in Driving License.
5 Change of Biometrics in Conductor License.
6 Issue of Public Service Vehicle (PSV) Badge to Driver.
Issue of duplicate Public Service Vehicle (PSV) Badge to Driver.
7 Change of Name in Conductor License.
8 Issue of Duplicate Conductor License.
9 Conductor License Extract provisioning.
10 Change of Address in Conductor License.
11 Learner License Extract provisioning.
12 Change of Date of Birth in Driving License.
13 Issue of Duplicate Public Service Vehicle (PSV) Badge.
14 Change of Photo and Signature in DL
Vahan Services
15 Permit Non-Use Intimation.
16 Payment of additional Life Time Tax (Transfer of ownership Case).
17 Issue or Renewal of Trade Certificate.
மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலங்கள் ஆகியவற்றில் மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை விரைந்து அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆன்லைன் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு முதலில் தங்களது ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் Update-ஆக இருப்பதை உறுதி செய்த பின்னரே உள்ளீடு செய்ய முடியும். விவரங்கள் மாறுபட்டிருந்தால் இந்த ஆன்லைன் சேவையை பெற இயலாது.
LLR மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுவதில் அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை எந்தெந்த அலுவலகங்களில் அதிகமாக உள்ளதோ அல்லது பெறப்படுகின்றதோ அந்த அலுவலகங்களை சனிக்கிழமை அன்றும் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்புடைய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் அந்தந்த மாவட்டத்தில் எந்தெந்த அலுவலகங்கள் சனிக்கிழமை அன்று செயல்படும் என்பது போன்ற அனைத்து விவரங்களை உள்ளடக்கிய விரிவான பத்திரிக்கைச் செய்தியும் வெளியிடப்படும். இந்த வசதியினையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments