Loading . . .




பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்காக ரூ.7,438 கோடி கடன் வாங்க முடிவு; தொழில்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பேட்டி

The Forecast 2 years ago கர்நாடகா

தொழில்துறை, உள்கட்டமைப்பு துறை மந்திரி எம்.பி.பட்டீல் பெங்களூருவில் நேற்று லிங்கராஜபுரம், ஹெப்பால், யஷ்வந்தபுரத்தில் நடைபெற்று வரும் புறநகர் ரெயில் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மின்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் மற்றும் உயர் அதிகாரிகள் இருந்தனர். இந்த ஆய்வுக்கு பிறகு எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-பெங்களூரு புறநகர் ரெயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை நான் இன்று(நேற்று) ஆய்வு செய்தேன். 2-ம் கட்ட பணிகளுக்காக தென்மேற்கு ரெயில்வேயிடம் இருந்து 157 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளோம். தனியாரிடம் இருந்து 5.11 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளோம். இதில் 15 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.


0 Comments

Post your comment here

கர்நாடகா Relateted News