சந்திரயான்-3 திட்டத்தை
வெற்றியடையச் செய்த இஸ்ரோ
விஞ்ஞானிகளை கர்நாடக முதல்வர்
சித்தராமையா நேரில் சந்தித்து
பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் முதல்வர் சித்தராமையா
நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரிப்
பிரச்னையில் 2018 பிப்ரவரி 5ம் தேதி
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப்படி,
தமிழகம் தண்ணீர் திறந்துவிடக் கோரி
மனு தாக்கல் செய்துள்ளது. இந்த
விஷயத்தில் கர்நாடகாவும் எங்க தரப்பு
கருத்துகளை உச்சநீதிமன்றத்தில்
வாதாடும் போது தெரிவிக்கும். காவிரி
விவகாரத்தில் பிரதமரை சந்திக்க
அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.
நிலவின் தென் துருவத்தில்
நன்மைகள் அதிகம் என்பதால்
அப்பகுதியில் ஆராய்ச்சி
செய்ய முடிவு செய்யப்பட்டது என
நிலவின் தென் துருவத்தில்
சந்திரயான்-3 இறங்கியது
ஏன் பலரின் கேள்விக்கு இஸ்ரோ
தலைவர் சோம்நாத் பதில் அளித்துள்ளார்.
மேலும், அவர் கூறியிருப்பதாவது:
வேறு கிரகத்தில் மனிதர்களால்
குடியேற முடியுமா என்பதை அறிய
நிலவின் தென்துருவத்தில்
தங்கி ஆராய திட்டமிடப்பட்டுள்ளது
என்றார்.மிகவும் பெருமை
இதற்கிடையே, துணை முதல்வர் டி.கே
சிவக்குமார் அளித்த பேட்டி: இந்தியா
அறிவியலில் சரித்திரம் படைத்த அந்த
மகத்தான தருணத்தைக் கண்டு நான்
மிகவும் பெருமைப்படுகிறேன்.
உலகத்தின் அறிவுத்
தலைநகரம் என்பதை இந்தியா
நிரூபித்துள்ளது. இந்த வெற்றிக்கு
ஒட்டுமொத்த குழுவும்
உழைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments