அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கலந்து கொண்டனர். சித்தராமையா கூறியதாவது:- புதிய மின் இணைப்பு வழங்க மின் பகிர்மான நிறுவனங்கள் அதிக காலம் எடுக்கக் கூடாது. மின்மாற்றிகளோ, மின்கம்பங்களோ இல்லை என்று சொல்லவே வேண்டாம். பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின்சாரம் வழங்குவதில் தாமதம் ஏற்படக்கூடாது. பணிகளை தாமதப்படுத்துவது தவறு.
துணை மின் நிலையங்கள் கட்டுதல், மின்மாற்றி அமைக்க நிலம் ஒதுக்கீடு தொடர்பாக எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன?. விண்ணப்பங்களை நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இவற்றின் மீது அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் குறைந்துள்ளது. இதை சரி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள வரியை வசூலிக்க சொத்து மற்றும் வணிக வரி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
0 Comments