Loading . . .




போதைப்‌ பொருள்‌ தடுப்பு மற்றும்‌ கள்ளச்சாராயம்‌ ஒழிப்பு நடவடிக்கைகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது

The Forecast 1 year ago கோவை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  போதைப்‌ பொருள்‌ தடுப்பு மற்றும்‌ கள்ளச்சாராயம்‌ ஒழிப்பு நடவடிக்கைகள்‌ குறித்த கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி இ.ஆ.ப., தலைமையில்  நடைபெற்றது. 

கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம்‌ மற்றும்‌ போதைப்‌ பொருள்‌ விற்பனை செய்யப்படுகின்றதா என தீவிர கண்காணிப்பு மற்றும்‌ திடீர்‌ சோதனைகள்‌ மூலம்‌ கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும்,‌  மெத்தனால்‌, எத்தனால்‌ பரிவர்த்தனை மற்றும்‌ கொண்டு செல்வதை கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

அனைத்து கிராமங்களிலும்‌ கிராம நிர்வாக அலுவலர்‌ மற்றும்‌ கிராம உதவியாளர்கள்‌ விழிப்புடன்‌ செயல்பட்டு தங்களது கிராமத்தில்‌ கள்ளச்சாராய நடமாட்டத்தை கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும்‌ காவல்துறைக்கு தகவல்‌ தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்‌, அனைத்து வருவாய்த் துறை, காவல்துறை, உணவுப்பாதுகாப்புத் துறை கண்காணிப்பினை தீவிரப்படுத்தி, திடீர்‌ கள ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், குறிப்பாக பள்ளி மற்றும்‌ கல்லூரிகளின் ‌அருகே ஆய்வு மேற்கொண்டு, போதைப்‌பொருள்‌ விற்பனையினை ஒழிக்க கடும்‌ நடவடிக்கை மேற்கொள்ளவும்‌ அறிவுறுத்தினார்‌. 

கோவையில் சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை, வெளிமாநில மதுவை கடத்தி விற்பனை செய்தல், கள்ளசாராயம்  காய்ச்சுதல், கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம். கோயம்புத்தூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கு 76049 10581 என்ற வாட்ஸ் அப் எண்ணிலோ அல்லது 10581  என்ற எண்ணிலோ  தொடர்பு கொண்டு  தகவல் தெரிவிக்கலாம்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News