கோவையில் பேருந்து நிறுத்தங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
Janani G 1 year ago கோவை
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரையில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலத்தின் கீழ் பகுதியின் இரு புறங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் புதிதாக பயணிகள் நிழற்குடை அமைப்பது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி ஆணையர் செந்தில்குமரன், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகர திட்டமிடுநர் கோவிந்தபிரபாகரன், புவனேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் நந்தினி, இளம்பொறியாளர் கார்த்திகேயன், மாநகராட்சி உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments