Loading . . .




சிறுமுகையில் பிடிபட்ட ராஜநாகம்

Janani G 1 month ago கோவை

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் பாலப்பட்டி, வேடர் காலணி, எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் வனத்தில் இருந்து அவ்வப்போது புலி,  காட்டு எருமை, மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் குடியிருப்பு மற்றும் விளை நிலங்களுக்குள் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் எம்.ஜி.ஆர் நகரில் விளை நிலத்தையொட்டி உள்ள வனப்பகுதியோரம், சுமார் 12 ஆடி நீள ராஜ நாகம் ஒன்று  இருந்துள்ளது. இதனை அப்பகுதி பொது மக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமுகை வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ராஜநாகத்தை பிடித்தனர். பின் அதனை அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர்.

0 Comments

Post your comment here

கோவை Relateted News