ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago கோவை
கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல வார்டு பகுதிகளில் ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் தெற்கு மண்டலம், வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம். மாச்சம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள குழந்தைகள் மையத்தினை புதுப்பிப்பது தொடர்பாகவும், வார்டு எண்.94க்குட்பட்ட சுந்தராபுரம், ஜி.கே.ஸ்கொயர் பகுதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மைய கட்டுமானப்பணிகளையும், வார்டு எண்.93க்குட்பட்ட சுந்தராபுரம், கரியகவுண்டர் தெரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் (SBM 2.0) ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் சமுதாய கழிப்பிட கட்டுமானப் பணிகளையும் மற்றும் இடையர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.62.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமானப் பணிகளையும் மாநகராட்சி ஆணையாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வுகளின்போது, மதிப்பிற்குரிய துணை மேயர் வெற்றிசெல்வன். தெற்கு மண்டலத் தலைவர் ர.தனலட்சுமி, உதவி ஆணையர் குமரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன். மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம்பாஷா, குணசேகரன், இளஞ்சேகரன். முருகேசன், ராஜ்குமார், உதவி நகர திட்டமிடுநர் ஜெயலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன்,உதவி பொறியாளர்கள் சபரிராஜ், நவநீதகிருஷ்ணன், கோபாலகிருஷ்ணன், ரத்தினம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 Comments