சங்கனூர் பள்ளம் மேம்பாட்டுப் பணிகள் : மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
The Forecast 1 year ago கோவை
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட சங்கனூர் பள்ளம் ரூ.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மத்திய மண்டலத்திற்குட்பட்ட கண்ணப்பன் நகர், காந்திபுரம் 7-வது வீதி தொடர்ச்சி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சங்கனூர் பள்ளம் மேம்பாட்டு பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, உக்கடம் பெரிய குளத்தில் மழைக்காலங்களில் உபரிநீர் வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மதகுகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, மாநகராட்சி, மேற்கு மண்டலம், மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம் எதிர்புறம் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி நோக்கி செல்லும் பேருந்துகள் நின்று செல்லும் வகையில் பயணியர் நிழற்குடை அமைய உள்ள இடத்தினையும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0 Comments